கூலி படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் 14ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்திற்கான விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதாவது கலை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் திரை உலகை 50 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். இந்த வரலாற்று தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் அவருடைய கூலி திரைப்படத்தை பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்து தரப்பையும் ஈர்க்கிற மாஸ் என்ட்ரெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. கூலி மாபெரும் வெற்றிப்பட பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.


