தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா வெளியில் கிளம்பி கொண்டு இருக்க, வெளியே போறீங்களா என்று நந்தினி கேட்க எதுக்கு என்று கேட்கிறார். உங்களுக்கு புடிச்ச உருண்டை குழம்பு செய்யலாம்னு இருந்தேன் அதனால்தான் என்று சொல்ல, உன்ன தான் வேலை பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல என்று சொல்ல கல்யாணம் அண்ணன் பார்த்து பாரு என்று சொல்ல சரி ஓகே என சொல்ல பிறகு நந்தினி சீப்பு எடுத்து தலைவார வலி அதிகமாக இருப்பதால் வர முடியாமல் இருக்க சூர்யா நான் வாரி விடுகிறேன் என சொல்லி சீப்பு வாங்கி வாரி விடுகிறார். மாதவியும் சுரேகாவும் இதை பார்த்து கடுப்பாகி வந்து விடுகின்றனர். திமிரா இருந்த சூர்யா இவகிட்ட பூனை மாதிரி பம்மிக்கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார். நீ எதுக்கு இவ்வளவு பெரிய முடி வச்சிருக்க என்று கேட்டா முடி வளக்குறது தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும் என சொல்லுகிறார். பிறகு சூர்யா நந்தினிக்கு தலைவாரி பின்னி விடுகிறார்.
பிறகு நந்தினி கண்ணாடியை பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு சார் என்று சொல்லுகிறார்.ஆனா உனக்கு லூஸ் ஹேர் அழகாக இருக்கிறது என்று சொல்ல சரி நான் கழட்டிடவா என்று கேட்க வேண்டாம் என சூர்யா சொல்லுகிறார் உடனே உங்களுக்கு பிடிக்கிறது தான் எனக்கும் பிடிக்கும் என நந்தினி சொல்ல ஆனா எனக்கு பிடிக்கிறது தான் உனக்கு பிடிக்க மாட்டேங்குது இந்த வீட்ல இரு என்று சொல்கிறேன் ஆனால் இருக்க மாட்டேங்கிற என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விட கண்ணாடி முன் நின்று யோசித்த நந்தினி மீண்டும் தலைப்பின்னியதை அவிழ்த்து விட்டு கீழே இறங்கி வருகிறார்.மறுபக்கம் அருணாச்சலம் சாமியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து அவரிடம் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை சொல்ல, நாளைக்கு வரலட்சுமி நோன்பு அந்த நேரத்துல உங்கள் மகன் சூர்யாவை உங்க மருமக நந்தினி கழுத்துல மறுபடியும் தாலி கட்ட சொல்லுங்க தாலி கட்டின நேரத்தில்தான் பிரச்சனை என்றால் அது மூலமா இது சரி பண்ணிடலாம் என்று சொல்ல அருணாச்சலமும் சரியென சொல்லுகிறார். நந்தினியும் மாதவியும் இதை கேட்டு விட்டு சென்றுவிட சாமியாரும் சென்று விடுகிறார். வெளியில் வரும்போது சுந்தரவல்லி எதிரில் வர நான் சொல்ல வேண்டியதெல்லாம் ஐயா கிட்ட சொல்லி இருக்கேன் பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சாமியார் என்ன சொன்னாரு என உள்ளே வந்தவுடன் கேட்க அருணாச்சலம் சூர்யா தாலி கட்ட போகும் விஷயத்தை சுந்தரவல்லி கிட்ட சொல்ல வேண்டாம் என நினைத்து விட்டு வரலட்சுமி பூஜை நடத்த சொன்ன விஷயத்தை மட்டும் சொல்லுகிறார். சரி என சொல்லிவிட்டு சுந்தரவல்லி உள்ளே வர ரூமில் மாதவி இருக்க நீ என்ன இங்க இருக்க என்ன விஷயம் என்று கேட்க, அப்பா ஏன் உங்ககிட்ட எதுவும் சொல்லலையா என்று கேட்க வரலட்சுமி விரதம் நல்லபடியா பண்ண சொல்லு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். வேற எதுவும் சொல்லலையா என்று கேட்க நீ எதுக்கு இப்ப சுத்தி வளைச்சு பேசிகிட்டு இருக்கே என்று கேட்க மாதவி சூர்யா நந்தினி கழுத்தில் இன்னொரு தாலி கட்ட சொல்லி இருக்காங்க என்று சொல்ல, என்ன நடந்தாலும் நான் இதை செய்யாமல் விட மாட்டேன் என சுந்தரவல்லி சொல்லுகிறார். நந்தினி வந்து அருணாச்சலத்திடம் வரலட்சுமி நோன்பு சாமி கும்பிடறதோட விட்டுவிடலாம் தாலி கட்டுற விஷயம் எல்லாம் வேண்டாம் ஏற்கனவே ஒரு வாட்டி கட்டிய தாலிக்கு சண்டை சச்சரவு வருது நீங்களும் பார்த்துக்கிட்டு தானே இருக்கீங்க என்று சொல்லுகிறார்.
பரிகாரம் பண்ண போறேன்னு நீங்க பண்ற விஷயம் இன்னொரு பிரச்சனையை கொண்டு வந்துரும் என்று சொல்ல, இது நான் பண்ற விஷயம் இல்லம்மா சாமியார் சொன்னது என்று சொல்ல, இந்த விஷயம் சுந்தரவல்லி அம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது. இவங்க சண்டை போட்டு அதுக்கு சூர்யா சார் சண்டை போட்டு எதுக்கு இதெல்லாம் என்று கேட்கிறார். உன் பயத்தில் இருக்கிற உண்மை எனக்கு புரியுது. நீ ஒன்னும் புதுசா தாலி கட்ட போறது கிடையாது ஏற்கனவே சூர்யா உனக்கு தாலி கட்டி இருக்கான். இது பத்தி நீ எதுவும் மனதை போட்டு குழப்பிக்காத நாளைக்கு இது நடந்தே ஆகணும் என்று அருணாச்சலம் சொல்ல நந்தினி அமைதியாக சென்று விடுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி போனில் ஒருவரிடம் இந்த வருஷம் வரலட்சுமி பூஜைக்கு நீங்க கண்டிப்பா வரணும் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுடைய பசங்களுக்கு தேவை என்று பேசிக்கொண்டு இருக்க மாதவி,சுரேகா இருவரும் யாரும் பெரிய ஆள் கிட்ட பேசிகிட்டு இருக்கறீங்க யாருமா என்று கேட்க வரும் போது தெரிஞ்சுக்கோங்க என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் அருணாச்சலம் ஐயா என்ன சொன்னாலும் நீங்க கேப்பீங்களா என்று கேட்க சூர்யா ஆமாம் என்று சொல்லுகிறார் அப்போ வரலட்சுமி நோன்பு இருப்பீங்களா என்று கேட்க சூர்யா ஆமாம் என்று சொல்கிறார் பிறகு மாதவி மற்றும் சுரேகா இருவரும் நம்ம வேணா ஏதாவது செஞ்சு அவளை நாளைக்கு இங்க இருக்க விடாம பண்ணிடலாமா என்று கேட்கிறார்.
சுந்தரவல்லி நந்தினி இடம் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எங்கையாவது வெளியே போய் தொலை என்று நந்தினியை திட்டுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.