எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பால் சம்பந்தப்பட்ட உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. இது மட்டும் இல்லாமல் கீரை மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிடும் போது எறும்புக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்து எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு, முந்திரி பிஸ்தா உலர் பழங்கள் சாப்பிடுவது நல்லது இது மட்டுமில்லாமல் மீன் வகைகள் உணவில் சேர்க்க வேண்டும்.
மேலும் உணவில் முட்டை சேர்ப்பது மிகவும் அவசியம். அது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.