Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா சொன்ன வார்த்தை, முத்து சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 24-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அடித்த விஷயத்தை க்ரிஷ் மறைத்து அடிக்கவில்லை என்று சொல்ல மீனாவுக்கு சந்தேகம் வருகிறது இது மட்டுமில்லாமல் கிரிஷ் இந்த வீட்ல இருக்கறது புடிக்கலன்னு சொன்னதா ரோகினி சொன்னதையும் மீனா யோசித்துப் பார்க்கிறார் மறுநாள் காலையில் கிருஷ் வந்து எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுங்க பாட்டி என்ற சொல்ல அதெல்லாம் முடியாது என்று விஜயா சொல்லுகிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வந்துவிட உனக்கு டான்ஸ் ஆட தெரியுமா என்று கேட்க நான் நிறைய டான்ஸ் போட்டியில் கலந்து இருக்கேன் பிரைஸ் கூட வாங்கி இருக்கேன் அதனால தான் சொல்லிக் கொடுக்க சொன்னேன் என சொல்லுகிறார்.

உடனே முத்து பாட்டு போட க்ரிஷ் டான்ஸ் ஆடுகிறார் கூடவே சேர்ந்து ரவி ஸ்ருதி டான்ஸ் ஆட குடும்பத்தினர் சந்தோஷமாக பார்க்க விஜயா கடுப்பாகிறார் இவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்க கொஞ்ச நேரத்தில் கூட்டமாக ஆட்கள் வருகின்றனர் வந்தவுடன் விஜயாவை பற்றி கோபமாக பேச முத்து யாரைப் பத்தி என்ன பேசுற என்று கேட்கிறார்

இந்த அம்மா நடத்துற டான்ஸ் கிளாஸ் ஆள தான் என் பொண்ணோட வாழ்க்கையே போயிடுச்சு என்று தப்பாக பேசமுத்து கோபப்படுகிறார் இது மட்டும் இல்லாமல் ஒரு பெண்மணி விஜயாவை அடிக்க வர உடனே மீனா கையை தடுத்து நிறுத்தி என் அத்தை மேல கைய வச்ச நான் கையை உடைத்து விடுவேன் என சொல்லுகிறார் முத்து ஒழுங்கா பேசுறது ஒழுங்கா பேசுங்க இல்லனா கைய கால ஒடச்சி அனுப்பிடுவேன் என சொல்லுகிறார். ஆனால் ரதி வீட்டு ஆட்கள் எங்களுக்கு நியாயம் கிடைச்சாக வேண்டும் என்று கோபமாக பேசுகின்றனர் உடனே முத்து அவர்களை அமைதியாக இருக்க சொல்ல மீனா ரதியிடம் இப்ப மட்டும் இதுக்கு அமைதியா இருக்க எல்லாத்துக்கும் நீங்க தானே காரணம் இதுக்கு எப்படி எங்க அத்தை பொறுப்பேத்துக்க முடியும் வாயை திறக்காமல் அமைதியா இருக்க பேசு என்று சொல்லுகிறார்.

உடனே முத்து அமைதியா இரு மீனா என்று சொல்லிவிட்டு நான் எதுவும் எந்த பிரச்சனையா இருந்தாலும் தீர்த்து வைக்க பார்ப்பேன் அதே மாதிரி உங்க பொண்ணு விஷயத்துலயும் என்னால முடிஞ்ச முயற்சியை பண்றேன் நான் அந்த பையன் வீட்ல போய் பேசி பார்க்கிறேன் என சொல்ல அவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். உடனே மீனா நீங்க வாங்க அத்தை நீங்க எதுவும் பயப்படாதீங்க என்று சொல்லி ரூமுக்கு அழைத்துப் போக விஜயா பயத்தில் ரூமில் அடங்கி உட்கார்ந்து கொண்டிருக்க குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நிற்கின்றனர். முத்து அப்பவே மீனா சொன்னா அந்த பசங்க கட்டி புடிச்சுகிட்டு நின்னுட்டு இருந்தாங்க ஆனா யாரும் அதைக் கேட்கல எதுவும் இல்லாம நானே உரசிக்கிட்டு இருக்கும்போது பார்த்தேன் அதையும் பார்த்து பார்வதி ஆண்டிகிட்ட கதவெல்லாம் பூட்டி வைங்கன்னு சொன்ன யாரும் எதுவும் கேட்கல என்று சொல்லுகிறார்.

விஜயா இவன் ஒன்னும் எனக்கு உதவி செய்ய வேண்டாம் மனோஜ் பார்த்துப்பான் என்று சொல்ல உடனே மனோஜ் நான் உடனே ஒரு வக்கீலுக்கு ஏற்பாடு பண்றேன் என்று சொல்ல உடனே வக்கீல் எல்லாம் பார்த்தா அதுக்குள்ள அவங்க எல்லாரும் அம்மா பத்தி தப்பா சொல்லிட்டு வாங்க அதெல்லாம் வேலைக்காகாது ஒன்று சொல்ல உடனே முத்தம் என் உயிர் போனாலும் உங்களுக்கு ஒன்னும் ஆகாம நான் பார்த்துப்பேன் எனக்கு சொல்ல விஜயா என்ன சொல்லுகிறார்?அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 24-07-25