தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலமும் சுந்தரவள்ளியும் வீட்டுக்கு வர இவர்கள் மூவரும் வெளியில் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து சுந்தரவல்லி கோபப்படுகிறார் அருணாச்சலம் நீ நந்தினி கேட்டுக்கு வெளியே நிப்பாட்ட சொன்னது இப்பதான் எனக்கு தெரிஞ்சது அதுக்கு தான் அவன் பதிலுக்கு இப்படி பண்ணி இருக்கான் என்று சொல்லுகிறார்.
நந்தினி கதவை திறக்க சுந்தரவல்லி உனக்கு எவ்வளவு தைரியம் என்று கன்னத்தில் அறைந்து நீயா இந்த வீட்டை விட்டு போறியா இல்ல கழுத்த புடிச்சு வெளிய தள்ளவா என்று சொல்லுகிறார். நீதான் கேட்ல இருக்கான்னு தெரியாம அமைதியா இருந்தாங்க இப்ப தெரிஞ்ச உடனே வேண்டும் என அசிங்கப்படுத்தி நடத்துவாங்க என்று சிங்காரத்திடம் சொல்லி கண்கலங்கி அழுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
