விஜயா செய்த வேலைக்கு முத்து ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் வீட்டுக்கு வந்த ரோகினி எதுக்கு இப்ப மீனா அடிக்கடி வந்துட்டு போறா என்று கேட்க ரோகிணி நடந்த விஷயங்களை சொல்லுகிறார் நீயும் என்னவா போயிட்டு வரலாம் என்று சொல்ல வேண்டாம் நான் வரல எனக்கே பிரச்சனை அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க என் மாமியார் மனோஜ் என்கிட்ட இருந்து பிரிச்சி இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்றாங்க என்று சொல்ல வித்யா அதிர்ச்சி அடைகிறார். என்ன பண்ணப் போற இப்போ என்று கேட்க நான் அவங்க கிட்ட இருந்து மனோஜ் பிரிச்சு என்னோட பேச்ச கேக்கற மாதிரி பண்ணிடுவேன் என்று ரோகினி சொல்லுகிறார்.
மறுபக்கம் முருகன் வீட்டு புரோக்கருடன் பைக்கில் வர நம்ம எங்க போறோம் என்று கேட்கிறார் அதற்கு முருகன் நம்ம கார் செட்டுக்கு போறோம் அங்க எங்க அண்ணன் இருப்பார் என்று சொல்ல உங்க கூட பொறந்த அண்ணனா என்று கேட்கிறார் கூட பொறந்த அண்ணன் இருப்பாரு ஆனா எனக்கு தெரிஞ்ச அண்ணன் இருப்பார் அவர் ரொம்ப நல்லவரு என் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கிறவரு அவர போய் சந்தித்து பேசிட்டு வந்துடலாம் என்று முடிவெடுத்து வருகின்றனர் உடனே கார் ஷேட்க்கு வந்து இறங்கியவுடன் வீட்டு புரோக்கருக்கு போன் வர அவரது மனைவி பேசுகிறார் இந்த வீடு முடிஞ்ச உடனே நம்ம வெளிநாட்டுக்கு போயிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
முருகன் முத்துவை சந்தித்து வீடு வாங்க போகும் விஷயத்தை நாளைக்கு காலைல 10 மணிக்கு நீங்க வந்து ஓகே சொன்னாதான் நான் வாங்குவேன் என்பதையும் சொல்ல முத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். பிறகு அவரை வழி அனுப்புவதற்காக வண்டி வரைக்கும் வர அதற்குள் முத்துவிற்கு சவாரி ஒன்று வந்துவிடுகிறது இதனால் முத்து அந்த புரோக்கரை சந்திக்காமல் சென்று விடுகிறார். உடனே முருகன் புரோக்கருடன் கிளம்பி சென்று விடுகிறார். பார்வதியும் விஜயாவும் சாமியாரை வந்து சந்திக்க அவர் என்ன விஷயம் என்று கேட்கிறார். என் பையனுக்கு பணக்கார இடத்துல பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சேன் ஆனால் அவ எங்களை ஏமாத்திட்டா அதனால அவங்கள பிரிக்கணும் என்று சொல்லுகிறார் எதுக்கு இப்படி பண்ணனும் என சாமியார் கேட்கிறார். வேற ஒரு பொண்ணு என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அதனால தான் என்று சொல்லி, என்னடா இது பெத்த அம்மாவே இப்படி கேக்குறா என்று நினைக்காதீங்க என்று சொல்லுகிறார்.பிறகு சாமியார் அவருக்கு கயிறு மந்திருச்சு கொடுத்து கையில் கட்டி விட சொல்லுகிறார். அங்கிருந்து இருவரும் கிளம்பி விட பார்வதி ரோகினிக்கு போன் போட்டு வர சொல்ல இவர்கள் கிளம்பியுடன் ரோகிணி வந்து இறங்கி சாமியாரிடம் என் புருஷனை அம்மா கிட்ட இருந்து பிரிக்கணும் என்று சொல்லி கயிறு வாங்குகிறார்.
பிறகு விஜயா வீட்டுக்கு வந்த உடனே என்ன நடக்கிறது? முத்து என்ன செய்கிறார்? விஜயா என்ன பண்ணப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 03-05-25