Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓவராக பேசிய ரோகினி, மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 01-05-25

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இருக்க ரவி மீனாவிடம் நீத்து கொடுத்த பணத்தில் பாதி கொடுத்து நீங்க சூப்பரா சமைக்கிறீங்க அண்ணி பூ கட்டுற பிசினஸ் கூட சேர்ந்து இதையும் பண்ணீங்கன்னா நீங்களும் பிசினஸ் மேன் ஆயிடுவீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க உடனே மனோஜ் ரெண்டு வாழைப்பூ வடையை செஞ்சா பிசினஸ்மேன் ஆகிட முடியுமா அப்படின்னா என்னன்னு உங்களுக்கு முதல்ல தெரியுமா என்று ரவி மற்றும் மீனாவை குறைவாக பேசுகிறார்.

உடனே முத்து அடுத்தவனோட பொருளை வாங்கி விக்கிற நீ பிசினஸ்மேன் இவங்களா கிரியேட்டிவிட்டியா செஞ்சு அவங்க தொழிலை சாதிக்கிறது உனக்கு விஷயமே இல்லையா என்று கேட்கிறார். உடனே விஜயா என்ன பண்ண முடியும் நம்மளுக்கு வாச்சது சரியில்லை இவங்க கிட்ட எல்லாம் எப்படி பேச முடியும் என்று உடனே ரோகினி இடம் செல்கிறார். என்னெல்லாம் பொய் சொல்லி இருக்கா எப்படி எப்படி உங்க அப்பா அக்கவுண்ட்ல 300 கோடி இருக்கா? எப்படி எல்லாம் சொல்லி ஏமாத்துன நீ என்று பேசுகிறார். அண்ணாமலை எதுக்கு இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க விஜயா என்று கேட்க உடனே என் வாய அடைக்க வந்துருங்க இவளாவது பூ கட்டி வைக்கிறா அவ தின கூலி தானே என்று சொல்லி பேச, நானும் ஒரு நாள் உழைத்து முன்னேறி வருவேன் என்று ரோகினி சொல்ல விஜயா மனோஜை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

அனைவரும் சென்று விட மீனா ரோகினிக்காக வருத்தப்பட முத்து என்னைக்காவது பார்லர் அம்மா உனக்காக வருத்தப்பட்டு இருக்கா என்று சொல்லி சென்று விடுகிறார் மறுபக்கம் மூவரும் மேலே குடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்க மனோஜ் சோகமாக இருக்கிறார் ரவி உனக்காக தான் சேர்த்து வாங்கிட்டு வந்தேன் குடி என்று சொல்ல இருந்தாலும் நீ அப்படி பண்ணி இருக்கக்கூடாதுடா என்று ரவியை கேட்கிறார் நான் என்ன பண்ண என்று கேட்க ஒன்னு காசு கொடுப்பது இருந்தா யாருக்கும் தெரியாம குடுத்துட்டு போக வேண்டியது தானே நீ எல்லாரும் முன்னாடி வச்சி எதுக்கு குடுத்த அதனாலதான் ரோகினி அம்மா திட்டிட்டாங்க என்று சொல்லுகிறார். ஒரு பக்கம் ரோகினி ஒரு பக்கம் அம்மா நான் என்ன முடிவு எடுப்பேன்னு எனக்கு தெரியல என்று சொல்ல உடனே ரவி அண்ணி உன்ன நம்பி வந்திருக்காங்க உனக்காக தான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி இருக்காங்க இருந்தாலும் நீ அன்னிப்பக்கம் தானே இருந்திருக்கணும் என்று சொல்ல உடனே அதுக்கு தான் அம்மா என்கூட பேசாத இனிமே உங்கள உனக்கு அம்மாவா இருக்க மாட்டேன் என்று சொல்றாங்க நான் என்ன பண்றது ஒண்ணுமே தெரியாமல் முழிச்சுக்கிட்டு இருக்கேன் நானே ஒரு பக்கம் ரோகினி பேசுன்னு சொல்றா என்று புலம்புகிறார்.

ஒன்னு அம்மாவை கால் பண்ண இல்ல பார்லர் அம்மா கிட்ட பேசு என்று முத்து சொல்ல மீண்டும் குடித்துவிட்டு எனக்கு இன்னொரு பாட்டில் வேண்டும் என்று கேட்கிறார் உடனே முத்து முதல்ல நம்மளுக்கு வாழ்க்கையில யாரும் முக்கியம் யார் கூட கடைசி வரைக்கும் வாழப்போறோம் என்பதை யோசி அப்புறம் உனக்கு தானா புரியும் என்ன பண்றது என்று சொல்கிறார்

மறுபக்கம் ஸ்ருதி மீனா கிச்சனில் பால் குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் ஆன்ட்டி உங்க மேல ரொம்ப கோவமா இருக்காங்க மனோஜ் எப்ப பாத்தாலும் ஒரு அம்மா பையனா இருக்காரு என்று சுருதி சொல்ல எதுக்கு ஏதாவது ஒரு முடிவு இருக்கா மீனா என்று கேட்க அதற்கு மீனா ஏற்கனவே நான் பார்வதி ஆன்ட்டி கிட்ட போய் பேச சொல்லிட்டேன் அவங்க பேசுனா ஆன்ட்டி புரிஞ்சு இருப்பாங்க என்று சொன்னேன் ஸ்ருதி எனக்கு தெரிஞ்சு அவங்க சொன்னா எல்லாம் ஆன்ட்டி கேட்கிற மாதிரி எனக்கு தெரியல ஏன்னா அவ்வளவு கோவமா இருக்காங்க எதுக்கு எல்லாம் ஒரு வழி என்கிட்ட இருக்கு என்று சொல்லுகிறார்.

ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? ரோகினி என செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 01-05-25
SiragadikkaAasai Serial Episode Update 01-05-25