தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மதராஸி படம் பற்றி பேசி உள்ளார்.
அதில் மதராஸி ஒரு ஆக்சன் திரைப்படம் என்றும் இந்த கஜினி பட பாணியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு இன்னும் 22 நாட்கள் மீதம் உள்ளதாகவும் அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ar murugadoss about madharasi movie update