கருப்பு மிளகு அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் கருப்பு மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வயிறு வலி மற்றும் வயிறு எரிச்சல் உண்டாக்கும்.
இது மட்டும் இல்லாமல் ஒவ்வாமை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை உண்டாக்குவது மட்டுமில்லாமல் நுரையீரலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மேலும் உயர் ரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கும். கருப்பு மிளகு ஆரோக்கியம்தான் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.