Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் அஜித்திற்கு கிடைத்த விருது.. பிரபலங்கள் வாழ்த்து.!!

AjithKumar received the Padma Bhushan award..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அஜித் கார் ரேசிங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நாட்டிற்காக உயர் நிலையில் சேவையாற்றியவர்களை மூணாவது உயரிய குடிமகன் என அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு சார்பில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.

இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் பார்த்திபன் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு இசை பிரபலம் அஜித் குமாரின் நம்பர் கேட்க.. நான் ஏன் என்று கேட்டேன் மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது.உடனே கொடுங்கள் என்று சொல்ல நல்ல விஷயம் என்பதை புரிந்து கொண்டு நான் முயற்சி செய்து அவரின் பிஆர்ஓ திரு சுரேஷ் சந்திராவை தொடர்பு ஏற்படுத்தினேன் மாலையில் வந்த செய்தி அவர் கழுத்துக்கு மாலை என்பதும் மீதி தலைக்கு கிரீடமானது கங்கிராஜுலேசன் பத்மபூஷன் அஜித் குமார் என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.