Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஜெஃப்ரி மற்றும் அன்சிதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியும்? முழு விவரம் இதோ..!

BiggBoss 8 Tamil Latest Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. அதில் ஜெஃப்ரி மற்றும் அன்சிதா இருவரும் வெளியேறி உள்ளனர்.

இவர்கள் இருவரும் 80 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் அன்சிதா ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெஃப்ரி ஒரு நாளைக்கு பத்தாயிரம் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. மேலும் டைட்டில் வின்னராக யார் வந்தால் நன்றாக இருக்கும் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

BiggBoss 8 Tamil Latest Update