விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ரம்யா சுப்ரமணியன்,ஆரவ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில் தற்போது வரை 22 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
