இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரம் இரண்டு எவிக்ஷனாக ஆனந்தியும், சாச்சனாவும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் நேற்று தீபக் மற்றும் அருண் இடையே வாக்குவாதம் இன்றும் தொடர்ந்து வருகிறது. தீபக் அருனிடம் நீங்க வெஷல் வாஷிங் தான அதை மட்டும் பாருங்க என்று சொல்லுகிறார். உங்களுக்கு சரியான பேரு ட்விஸ்ட்டர் கொடுத்திருக்காங்க எனக்கு இப்பதான் புரியுது என்று தீபக் சொல்லுகிறார். அதற்கு அருன் உங்கள மாதிரி ஜாக்சன் துறைக்கு முன்னாடி ட்விஸ்ட் பண்ண தப்பு இல்லை என்று சொல்லுகிறார். பிறகு அருன் இவர் பண்றது உங்க யாருக்கும் தப்பா தெரியலையா என்ன ஆச்சுயா உங்க எல்லாருக்கும் என்று கோபமாக கேட்டுவிட்டு தனியாக சென்று உட்காருகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram