ஜோடியாக கோட் படத்தை பார்த்துள்ளனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பு உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சினேகா, லைலா ,பிரசாந்த் பிரபுதேவா, யோகி பாபு, பார்வதி நாயர் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் தெறிக்கவிட்டு வருகிறது. முதல் நாளிலேயே 100 கோடி தாண்டிய வசூல் இன்னும் வார இறுதி நாட்கள் என்பதால் 200 கோடியை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
கோட் படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக வந்து கோட்படத்தை பார்த்துள்ளன.
தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

vignesh shivan and nayanthara latest newsvignesh shivan and nayanthara latest news