தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
விடாமுயற்சி திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்து குட் பேட் அக்லி படத்தை முடித்த பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் பரவியது.
அஜித் படம் பற்றி எல்லாவித அப்டேட்டுகளையும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் வெளியிட்டு வருகிறார். ஆகையால் அவரிடம் அஜித் பிரசாந்த் நீல் படம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருவரும் சந்தித்துக் கொண்டது உண்மை தான். ஆனால் கதை குறித்த விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை என சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் இது வெறும் நட்பு சார்ந்த சந்திப்பு தான் என தெரிய வந்துள்ளது.
