இந்தியன் கிரிக்கெட் வீரராக கேப்டனாக வலம் வந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் எம்எஸ் டோனி. சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக பல ஆண்டுகளாக வலம் வந்த இவர் தற்போது பட தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான எம் எஸ் தோனி ரஜினிக்கு அடுத்தபடியாக யாரை பிடிக்கும் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் சூர்யாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ள எம் எஸ் டோனி தமிழில் சிங்கம் படத்தை பார்த்ததாகவும் அதில் சூர்யாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரது ரசிகர் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாகி சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ரசிகர்கள் கொண்டாடும் தலைவனாக எம் எஸ் தோனிக்கு பிடித்த நடிகராக சூர்யா இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
