Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாமியாரை சந்தித்த விஜயா, மனோஜ்,ஷாக்கான விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 16-07-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் தூக்கமின்றி தவிப்பது மட்டுமில்லாமல் ரோகிணியை எழுப்பி வாய் சரியா இருக்கா என்று திரும்பத் திரும்ப கேட்க ரோகினி கோபப்பட்டு இன்னொரு முறை எழுப்பின வாய் கோணையாக அந்த பழமெல்லாம் தேவையில்லை நானே போதும் என்று மிரட்டுகிறார்.

பிறகு மனோஜ் வெளியே வந்து பூஜை அறைக்குள் பார்த்துக் கொண்டிருக்க விஜயா உன் பின்னாடி வந்து அவன் தோள் மீது கை வைக்க மனோஜ் கத்த விஜயா நான் தான் கத்தி அந்த முத்துவை எழுப்பி விட்டுவிடாத என்று திட்டுகிறார். உன்னால எனக்கும் தூக்கம் இல்லாமல் போச்சு என்று மனோஜ் பிடித்து திட்டி பார்வதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பார்வதி அவரது பங்குக்கு பயத்தை காட்டி விடுகிறார். பிறகு சாமியாரை பார்க்க முடிவெடுக்கின்றனர்.

அடுத்த நாள் காலையில் மனோஜ் சீக்கிரமாக ரெடி ஆவதை பார்த்து ரோகினி இவ்வளவு சீக்கிரம் எங்கே கிளம்பிட்ட என்று கேட்க அம்மாவும் பார்வதி ஆண்டியும் ஒரு ஃபங்க்ஷனுக்கு போறாங்க அவங்கள டிராப் பண்ணிட்டு நான் தாம்பரம் வரைக்கும் போயிட்டு வரேன் என்று சொல்கிறார். நானும் இரண்டு கிளையண்ட் பாக்க போணும் என்னையும் டிராப் பண்ணிடு என்று சொல்ல மனோஜ் நீ ஆட்டோல போயிட்டு என்று சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை விஜயா காலையிலேயே எங்க கிளம்பிட்டேன் என்று கேட்க பார்வதிக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்கிறார். முத்து என்னாச்சு என்று கேட்க மனோஜ் வயிற்றுவலி எனவும் விஜயா காய்ச்சல் எனவும் உளறுகிறார். திரும்பவும் கேட்க இருவரும் பதிலை மாற்றிக் கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து சாமியாரை பார்க்க அவர் கண்டிப்பாக அது எலுமிச்சம்பழம் பலிக்கும் உங்க வாய் கோணையாகும் என்று அதிர்ச்சி கொடுக்க விஜயா எங்களை நீங்கதான் காப்பாத்தணும் என்று கேட்க பதிலுக்கு அவர் ஒரு பழத்தை மந்திரித்து கொடுக்கிறார்.

அந்த பழத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் முத்து வைத்த பழத்துக்கு எது திசையில் வைக்க பழம் உருண்டோடி கிழே விழ இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 16-07-24
siragadikka aasai serial episode update 16-07-24