தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கூண்டில் ஏற்றப்பட நீதிபதி இரு தரப்பு விவாதத்தையும் கேட்ட பிறகு ஈஸ்வரி குற்றவாளி என்பது உறுதியாவதாக அதிர்ச்சி கொடுக்கிறார்.
மேலும் அவருக்கான தீர்ப்பை அறிவிக்க போக ராமமூர்த்தி அவ எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டா என்று சத்தம் போட போலீஸ் அவரை வெளியேற்ற நீதிபதி தீர்ப்பை இடைவேளைக்கு பிறகு சொல்வதாக தள்ளி வைக்கிறார். இதனால் கமலா டென்ஷனாகிறாள்.
மறுபக்கம் பாக்யா ஸ்கூலுக்குச் சென்று மயூவை கூட்டிக்கொண்டு கோர்ட்டுக்கு வருகிறார். மயூ காரில் வெயிட் பண்ண பாக்கியா ஓடிவந்து என்னாச்சு என்று கேட்க எழில் பாட்டியை குற்றவாளி என்று சொல்லிட்டாங்க என்று ஷாக் கொடுக்கிறார். தீர்ப்பு சொல்லிட்டாங்களா என்று கேட்டு இல்லை என்று சொன்னதும் கோர்ட்டுக்குள் வந்து வழக்கறிஞரிடம் எதையோ பேச இவங்க என்ன ரகசியம் பேசுறாங்க என்று கமலா ஒட்டு கேட்க எழுந்து வர ராதிகா உட்காருமா என்று பிடித்து உட்கார வைக்கிறார்.
அதன் பிறகு மீண்டும் கோர்ட்டு கூட நீதிபதி தீர்ப்பு சொல்ல வரும் தருணத்தில் ஈஸ்வரியின் வழக்கறிஞர் இறுதியாக ஒரே ஒரு சாட்சியை மட்டும் விசாரிக்க வேண்டும் என அனுமதி கேட்க கோபப்படும் நீதிபதி இறுதியாக அனுமதியையும் கொடுக்கிறார்.
அதன் பிறகு மயூவின் பேரை சொல்லி அவளை கோர்ட்டுக்குள் அழைத்து வர ராதிகா அதிர்ச்சி அடைந்து இது என்னால அனுமதிக்க முடியாது என்று சத்தம் போட நீதிபதி அமைதியாக இருக்க சொல்கிறார். பிறகு மயூவை கூண்டுக்குள் ஏற்றி விசாரணை தொடங்க ராதிகா மீண்டும் அவளை எதுக்கு விசாரிக்கிறீங்க? அவ சின்ன பொண்ணு என்று கூச்சலிட கமலா அதான் சொல்ல வேண்டியது எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனே என்று சொல்கிறாள்.
இருந்தாலும் மயூவிடம் விசாரணை நடக்க அவள் அம்மா ஃப்ளவர் கேஸ் தடுத்து தான் கீழே விழுந்தாங்க பாட்டி அம்மாவ பிடிக்க தான் ஓடி வந்தாங்க ஆனா அதுக்குள்ள விழுந்துட்டாங்க பாட்டி அம்மாவ தள்ளி விடல நான் அதை பார்த்தேன் என்று சொல்ல ராதிகா அவளது அம்மாவை முறைக்க கமலா அதிர்ச்சி அடைகிறார். மயூ சொன்ன சாட்சியால் பாக்யாவின் குடும்பத்தினர் அனைவரும் நிம்மதி அடைகின்றனர்.
இறுதியாக நீதிபதி குடும்பத்தில் பிரச்சனை இருந்தால் பேசி தீர்த்துக்கணும் அதுக்காக பொய்யா கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
