90களில் தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ஸ்வர்ணமால்யா. அதுமட்டுமின்றி அலைபாயுதே, மொழி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த இவர் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பிறகு நடிப்பிலிருந்து விடைபெற்ற இவர் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் youtube சேனல் ஒன்றை தொடங்கி வெளியில் செல்லும்போது அங்கே கிடைக்கும் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தல் ரசிகர்கள் 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் பழனி சொர்ணமால்யாவா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
