தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற சீரியலில் இணைந்து நடித்தவர்கள் ஆரிய மற்றும் ஸ்ரீத்தா. ஸ்ரீத்தா இதற்கு முன்பாக நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது நகராட்சி சீரியல் தன்னுடன் இணைந்து நடித்த ஆரியனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆரியனும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது ஸ்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சீரியலின் மூலம் நட்பாக தொடங்கிய இவர்களது உறவு காதலாக மாறி தற்போது ரெஜிஸ்டர் திருமணத்தில் முடிவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்த இவர்களது பதிவு இணையத்தில் வைரலாக பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram

