Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி அசோக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா?வைரலாகும் அறிவிப்பு

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி அசோக்குமார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் இவருக்கு ஒரு பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது.

மேலும் இவர் மோதலும் காதலும் சீரியலிலும் நடித்து வந்தார். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வந்த இவர் பிரசவத்திற்கு ஒரு வாரம் இருக்கும் வரை இந்த சீரியலில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு இரண்டாவது குழந்தைக்கு அம்மாவானதை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீ தேவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Sridevi Ashok blessed baby girl
Sridevi Ashok blessed baby girl