தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சிவானி நாராயணன்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டு பாப்புலரான இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தொழிலதிபர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
