Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல்.எதிர் நீச்சல் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் வெகுவிரைவில் மேலும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது ஆக ஏற்கனவே தகவல் வெளியா

Suntv new serial update viral
Suntv new serial update viral

க இருந்தது. மேலும் இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ஆகியோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

லட்சுமி என்ற பெயரில் இந்த சீரியல் வெகுவிரைவில் ஒளிபரப்பாக உள்ளது. திருமணம் ஆனாலும் குடும்பத்துக்காக தான் உழைப்பேன் என ஸ்ருதி சொல்ல கழுத்து நிறைய நகையும் ஒன்னாம் தேதி ஆனா தனது கையில் சம்பளத்தையும் கொடுக்கும் ஒரு பொண்ணு தனக்கு மருமகளாக வரவேண்டும் என ஹீரோவின் அம்மா கணக்கு கொடுக்கிறார்.

இப்படி அந்த நிலையில் ஸ்ருதியும் லட்சுமியும் வாழ்க்கையில் ஒன்று சேர அடுத்து நடக்கப் போவது என்ன என்பதுதான் இந்த சீரியல் கதைக்களமாக இருக்கப் போகிறது என்பதை ப்ரோமோவில் வெளிப்படையாக தெரிகிறது.

இந்த சீரியல் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தினால் எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் பழையபடி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இவைகளில் ஒளிபரப்பு நேரம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலும் முழுவதுமாக முடிவுக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.