Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திறமையான கலைஞர்களை உருவாக்கித் தரும் தளமாக “ஸ்டார்டா” இருக்கும்: ஜிவி பிரகாஷ் பேச்சு

gv-prakash latest speech-goes-viral

தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலக அளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும் வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ எனும் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஜி. வி. பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த ‘ஸ்டார்டா’ தளத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், ஜி.வி.பிரகாஷ்குமார், அருண்ராஜா காமராஜ், ரமேஷ் திலக், நிவேதிதா சதீஷ், அபிஷேக் ராஜா, ஷ்யாம் குமார், சி. வி. குமார், தனஞ்ஜெயன், சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி.பிரகாஷ் \”குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள் போன்றவற்றிற்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒத்துழைப்பதில்லை. ஆனால் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ‘ஸ்டார்டா’ தளத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதற்கும் மகிழ்கிறேன். திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும் தளமாக இந்த ‘ஸ்டார்டா’ இருக்கும் என எதிர்பாக்கிறேன்.

நிறைய பேரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த தளத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். அதனால் இந்த தளத்தில் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தளத்தின் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்புகிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்த தளத்தில் உள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்த தளம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என உறுதியாக நம்புகிறேன்\” என்றார்.

gv-prakash latest speech-goes-viral
gv-prakash latest speech-goes-viral