Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரத்னம் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.அறிவிப்பு வைரல்

rathnam-movie-release-date-announced update

“இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்னம்’. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.ரத்னம் போஸ்டர்இந்நிலையில், ‘ரத்னம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.