தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்றோடு மொத்தமாக முடிவுக்கு வந்தது.
சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வெல்ல அவருக்கு அடுத்த இடத்தை பிடித்தார் மணிசந்திரா. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தன்னுடைய முதல் பதிவை பதிவு செய்துள்ளார் மணி சந்திரா.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இது அனைத்தும் உங்களால் மட்டுமே சாத்தியம் என தெரிவித்துள்ளார். இறுதியாக மக்கள் துணை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
