Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“வந்தே மாதரம்”பாடலை ஏ ஆர் ரஹ்மன் முன் பாடி அசத்திய பெண் ரசிகை.வைரலாகும் வீடியோ

ar-rahman-shared latest video-goes-viral

“தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ரோஜா’ திரைப்படத்தில் தொடங்கி பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களுக்கும் இசையமைக்கிறார்.இவர் இசையமைத்துள்ள ‘அயலான்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து ‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’, தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கும் இவர் இசையமைக்கிறார்.இந்நிலையில் ரசிகை ஒருவர் ஏ.ஆர். ரகுமானிடம் பாடல் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், காரில் உட்கார்ந்திருக்கும் ஏ.ஆர். ரகுமானிடம் வெளிநாட்டு ரசிகை ஒருவர் உங்களின் தீவிர ரசிகர் என்று கூறி உங்களுக்காக ஒரு பாட்டு பாடலாமா எனக் கேட்கிறார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் ஆம் என்றவுடன், ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடி காண்பிக்கிறார். உடனே அதை தனது செல்போனில் வீடியோ எடுத்த ஏ.ஆர்.ரகுமான் தனது இணைய பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.