Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகேஷ் பாபு நடிக்கும் “குண்டுர் காரம்” படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில் திரண்ட ரசிகர்கள்

guntur-kaaram-pre-release-event

இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குண்டுர் காரம்’. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.இந்நிலையில், ‘குண்டுர் காரம்’ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் நடைபெற்றது.

இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் ரசிகர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு நாற்காலிகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.இதை பார்த்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தினர். கூட்ட நெரிசலில் பழைய குண்டுர் காவல் நிலையத்தின் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கட ராவின் கால் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.