தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனியின் அப்பத்தா குடும்பம் வீட்டுக்கு வர ஜனனி இதோட நிறுத்திக்கங்க போதும் என சத்தம் போட குணசேகரன் இது என்னோட வீடு, அவங்க என்னை தேடி வந்திருக்காங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.
மேலும் ஷக்தியிடம் நீ இந்த வீட்டு பையன் உனக்கு எல்லா உரிமையும் இருக்குனு எகிறாத என்று சொல்ல ஷக்தி அதற்கு பதிலடி கொடுக்கிறார்.
அதை தொடர்ந்து ஜனனியின் அப்பத்தா குடும்பம் ஜனனியின் அம்மா பார்வதி எங்க குல தெய்வம் கோவிலுக்கு வந்து கற்பூரத்தை அடித்து அவ தாலியை கழட்டி கொடுக்கணும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
