Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய கெட்டப்பில் விஜய். வைரலாகும் ரீசன்ட் ஃபோட்டோ

thalapathy vijay-video-goes-viral

“இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘தி கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி வரை கோவளத்தில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் ராஜஸ்தானில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை கண்டு ஆர்ப்பரித்த ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்தார். தாடி, மீசை எதுவும் இல்லாமல் இளைஞர் போன்று விஜய் இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.”,

thalapathy vijay-video-goes-viral
thalapathy vijay-video-goes-viral