தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நிகழ்ச்சிகள் ஏதாவது சீசன் அடுத்த வாரம் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினார். இந்த வாரம் வெளியேற்றப்பட இருந்த பூர்ணிமா பணத்தோடு வெளியேறியது அவருடைய புத்திசாலித்தனம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இப்படியான நிலையில் பதினாறு லட்சம் ரூபாய் மட்டுமின்றி 96 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக ஒரு நாளைக்கு 15,000 என மொத்தமாக அவர் 14 லட்சம் சம்பளமாக பெற்றதாகவும் இதன் மூலம் மொத்தமாக அவர் 30 லட்சம் ரூபாய் சம்பாதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
