Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பணப்பெட்டியுடன் கிளம்பிய போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் ஷாக் தகவல்

who-quit-with-cash-from-bb-7 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இது கடைசி வாரம் என்பதால் நேரடியாக பைனலுக்கு சென்ற விஷ்ணுவை தவிர மீதம் உள்ள ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் அனைவரும் எதிர்பார்த்த பணம் பெட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பணப்பெட்டியை பூர்ணிமா எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாயா பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியதாக தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது.

வெளியில் அவருக்கு ஏகப்பட்ட வெறுப்பு இருப்பது கைதட்டல்கள் மூலமாக தெளிவாக தெரியும் நிலையில் எப்படியும் டைட்டில் நமக்கு இல்லை என்பதால் அவர் இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க நேற்று நடந்த டாஸ்க் ஒன்றில் தினேஷ் குறித்து விசித்ரா சொன்ன naration-ஐ ஏழு போட்டியாளர்களும் நிராகரித்த நிலையில் அவர் பயங்கர அப்செட்டுக்கு சென்றார். இதனால் அவர் பணப்பெட்டி மதிப்பு 12 லட்சம் ஆக உயர்ந்ததை தொடர்ந்து அதை எடுத்துக் கொண்டு வெளியேறினார் எனவும் இன்னொரு தகவல் பரவி வருகிறது.

இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் பணப்பெட்டியை எடுத்துள்ளனர் உறுதியாகி உள்ளது. அவர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

who-quit-with-cash-from-bb-7 tamil
who-quit-with-cash-from-bb-7 tamil