தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இது சீரியலில் செக்யூரிட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அன்பு என்கிற அன்பழகன்.
கனா காணும் காலங்கள் சீரியலில் பிடி மாஸ்டர் ஆக நடித்து பிரபலமான இவர் அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென மரணம் அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் விஜயகாந்தின் மரணம் தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


