Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 68 படத்தை முடித்த கையோடு இரண்டு வருடம் பிரேக்.. வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களை நடித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு லியோ என இரண்டு படங்களும் ரீதியாக வெற்றி பெற்றாலும் அருமையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தளபதி 68 படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் தளபதி 69 படத்தை இயக்க அட்லி தயாராக இருந்த வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஜிகர்தண்டா டபுள் x படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதையை கூறி விஜய்யிடம் ஓகே வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வலைப்பேச்சு அந்தணன் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு தளபதி விஜய் இரண்டு வருடங்கள் பிரேக் எடுத்து விட்டு அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார்.

இந்த இரண்டு வருட கேப்பில் மக்கள் பணி மற்றும் அரசியலில் நுழைவது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Thalapathy 69 latest update viral
Thalapathy 69 latest update viral