Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

80 நாட்களைக் கடந்து கிராண்ட் பைனலை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் பட்டியலில் விசித்ரா விக்ரம் மற்றும் ரவீனா என மூவர் மட்டுமே இடம் பிடித்தனர்.

ஓட்டிங் தொடங்கிய ஆரம்பம் முதலே விசித்ரா அதிகமான ஓட்டுக்களுடன் முதலிடத்தில் இருந்து வர அவருக்கு அடுத்தபடியாக ரவீனா இருந்து வந்தார்.

தொடர்ந்து குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருந்த சரவணன் விக்ரம் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை அறிந்த ரசிகர் பலரும் இது என்ன டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை என கமெண்டு போட்டு வருகின்றனர்.

Bigg Boss season 7 eviction update
Bigg Boss season 7 eviction update