Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

சலார் திரை விமர்சனம்

salaar movie review

“கதைக்களம்ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தந்தையை 7 வருடமாக ஒரு கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்போது ஸ்ரேயா ரெட்டி ஒரு கும்பலிடம் வரும்போது ஸ்ருதிஹாசனை கடத்தி வரச்சொல்கிறார்.இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து மகள் இந்தியா வந்துவிட்டதாகவும் நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறார். இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசனை காப்பாற்ற பிரபாஸ் களமிறங்குகிறார். இறுதியில் ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா கடத்த என்ன காரணம்? மைம் கோபிக்கு ஸ்ருதிஹாசன் தந்தை என்ன சத்தியம் செய்து கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார் நடிகர் பிரபாஸ். நண்பனுக்காக உருகும் காட்சிகளில் நம்மையும் கண் கலங்க வைத்துள்ளார்.பிரபாஸின் நண்பனாகவும், துரோகியாகவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பிரித்விராஜ்.

முதல் பாதியில் சாந்தமாகவும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளில் வெறித்தனமாகவும் நடித்து பாராட்டை பெறுகிறார். ஸ்ருதிஹாசன் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.இயக்கம்முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் பேக்காக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். சில காட்சிகளை தன்னுடைய திரைக்கதையில் மூலம் புல்லரிக்கும் படி அமைத்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதி நம் புருவங்களை உயர்த்தும்படியாக அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு ஏற்றபடி முதல் பாகத்தை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்கியுள்ளார்.

ஒரு சில இடங்களில் கேஜிஎப் படத்தின் சாயல் இருப்பது வருத்தம்.இசைரவி பன்சூரின் இசை நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.ஒளிப்பதிவுபுவன் கவுடாவின் கேமரா மிரட்டி இருக்கிறது.படத்தொகுப்புஉஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.காஸ்டியூம்தோட்டா விஜய் பாஸ்கர் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.புரொடக்‌ஷன்ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் ’சலார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.”,

salaar movie review
salaar movie review