Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர்இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பொங்கல் தினத்தில் படம் வெளியாக உள்ளது.கடந்த மாதம் லால் சலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிக பார்வையளர்களை கடந்தது.

இதனையடுத்து லால் சலாம் படத்தின் முதல் சிங்கிலான ‘தேர் திருவிழா’ நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகும் இந்த தேர் திருவிழா பாடலுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

Lal salaam movie first single song update
Lal salaam movie first single song update