Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை கொடுத்து உதவிய பாலா. வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து

bala-gave-her-own-money-to-chennai floods peoples

“சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.

bala-gave-her-own-money-to-chennai floods peoples
bala-gave-her-own-money-to-chennai floods peoples

சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.இந்நிலையில், சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா பண உதவி செய்துள்ளார். அதாவது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார்.இதுகுறித்து பாலா பேசியதாவது, \”என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2.15 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்\” என்றார். இவருக்கு மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.”,

bala-gave-her-own-money-to-chennai floods peoples
bala-gave-her-own-money-to-chennai floods peoples