Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு.ரசிகர்கள் ஷாக்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக பேட்டை படத்தில் நடித்தார். அதற்கு அடுத்ததாக விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்திலிருந்து கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்தார். தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் வில்லனாக வேடம் ஏற்று நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் வில்லனாக நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார். வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஹீரோயின் இமேஜை குறைக்காத படி வில்லனாக நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறார்கள். ஆகையால் இனி படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதுவரை படத்தின் ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் தான் சில படங்களில் வில்லனாக நடித்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Vijay sethupathi latest update viral
Vijay sethupathi latest update viral