தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரன் அப்பத்தாவை கூட்டிக்கொண்டு கதிர் மற்றும் கரிகாலனுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களை சுற்றி துப்பாக்கிச் சூடு நடக்க குணசேகரன் இவர்களை ஒரு கை பார்த்துட்டு தான் போகணும் என அப்பத்தாவை மட்டும் காரில் விட்டுவிட்டு மற்ற எல்லோரும் கீழே இறங்குகின்றனர்.
அதைத் தொடர்ந்து கதிர், ஞானம், கரிகாலன் ஆகியோர் பட்டையை போட்டுக்கொண்டு சோகமாக வீட்டுக்கு வர அப்பத்தாவுக்கும் குணசேகரனுக்கும் என்னாச்சு அவங்க எங்கே என கேட்க கதிர் சொன்னதைக் கேட்டு பிறகு கதறி துடிக்கின்றனர்.
எல்லாத்துக்கும் இவங்கதான் காரணம் என கதிர் சொல்ல ஜனனி அவன் சட்டையை பிடித்து கோபப்படுகிறார்.
