Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“எனக்கு ஒரு குட்டி ஆசை”: லியோ வெற்றி விழாவில் விஜய் பேச்சு

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பேசினர். அதன்பிறகு வெற்றி விழா நிறைவில் மேடை ஏறிய நடிகர் விஜய், லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் ‘நா ரெடி’ பாடலை பாடி, நடனமும் ஆடி மகிழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், “உங்களுக்காக என் தோலை செருப்பா தச்சா கூட உங்க அன்புக்கு ஈடு ஆகாது, என்னைக்குமே உங்களுக்கு உண்மையா இருப்பேன். எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும், அதுக்கு நம்ம பசங்க தான் காரணமா இருக்கனும்.” என்று தெரிவித்தார்.

Leo success meet Vijay speech
Leo success meet Vijay speech