Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொங்கலுக்கு ரெடியான தங்கலான்.வைரலாகும் சூப்பர் தகவல்

thangalaan-movie latest update

“இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘தங்கலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.”,

thangalaan-movie latest update
thangalaan-movie latest update