Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல் 234 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்

actor kamalhaasan-234-movie details

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச் 234’ படத்தில் நடிக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கமல் நடிக்கும் 234-வது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ அவரது பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.”,

actor kamalhaasan-234-movie details
actor kamalhaasan-234-movie details