தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா நிலாவை எங்கேயும் கூட்டிட்டு போக வேண்டாம் அவ வீட்டிலேயே விளையாடட்டும் என்று சொல்ல ஈஸ்வரி காரணம் கேட்க வெளியில் கொசு தொல்லை ரொம்ப அதிகமா இருக்கு, நிறைய நோயெல்லாம் பரவிக்கிட்டு இருக்கு அதனால அவ வெளியே போக வேண்டாம் என்று கூறுகிறார்.
ராமமூர்த்தி நீ சொல்றது சரிதான் பார்க்ல அவ்வளவு பெரிய கொசு எல்லாம் இருக்கு என சொல்கிறார். பிறகு ஈஸ்வரி கோவிலுக்கு போக போறேன் என்று சொல்லி பாக்யாவை கூப்பிட எனக்கு வீட்ல வேலை இருக்கு என சொல்ல அவர் அமிர்தாவை கூப்பிட அமிர்தா நான் வருகிறேன் என்று சொல்கிறார்.
உடனே பாக்யா வேண்டாம் வேண்டாம் அமிர்தா வீட்டிலேயே இருக்கட்டும் நான் உங்களோட கோவிலுக்கு வரேன் அதுக்கப்புறம் வந்து வேலைகளை பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி கிளம்பி செல்கிறார்.
மறுபக்கம் கோபி தன்னுடைய நண்பர் சதீஷை சந்தித்து பணம் இல்லாமல் கஷ்டப்படுவதை சொல்லி புலம்புகிறார். சரி ராதிகாவிடம் சொல்லி உதவி கேட்க வேண்டியதுதானே என்று சொல்ல ராதிகா அவங்க அம்மாவுக்கு அறுபதாவது பிறந்த நாள் என்பதால் நான்கு சவரன் நகை எடுத்து போட சொன்ன விஷயத்தை சொல்லி பணத்தைக் கேட்க சதீஷ் ஆள விடுடா என அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
பிறகு கோபி வீட்டுக்கு வர ராதிகா ஷாப்பிங் போகலாம் என்று சொல்ல தலை வலிக்குது என டிராமா போட்டு கோபி தப்பிக்க முயற்சி செய்கிறார். மறுபக்கம் பாக்கியா மற்றும் ஈஸ்வரி இருவரும் கோவிலுக்கு நடந்து வர பாக்யா கணேஷ் குறித்த விஷயத்தை சொல்லலாம் என்று முடிவு எடுத்து எழில் அமிர்தா கல்யாணம் பற்றி கேட்க எனக்கு இப்பவும் அந்த கல்யாணத்துல விருப்பமில்லை என சொல்லி அதிர்ச்சி கொடுக்க பாக்யா உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


