சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோய். நீரிழிவு நோய் வந்தாலே அது உடலில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருவது வழக்கம். குறிப்பாக உணவுகளில் நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகளை குறித்து நாம் தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த கேரட் முட்டைக்கோஸ் சுரைக்காய் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் கீரை வகைகள் மற்றும் தக்காளி பீன்ஸ் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை தொடர்ந்து உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியம்.
குறிப்பாக உணவில் காளான் சேர்த்து சாப்பிட்டு வரலாம். எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களை நாம் உணவில் சேர்த்து சாப்பிடும் போது நம் உடலுக்கு எந்த ஒரு நோயும் வராது என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.