தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் மாரி முத்து.
புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் இறுதியாக வெளியான ஜெயிலர் உட்பட பல்வேறு படங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து ( 58 ) திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
