Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“சூர்யா படத்தில் பேக் டான்சராக பணியாற்றியுள்ளேன்’.. பரம்பொருள் ஹீரோ அமிதாஷ் பேட்டி

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் அமிதாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வரும் நிலையில் அமிதாஷ் அளித்த பேட்டி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்தில் பேக் டான்சராக பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சூர்யாவுடன் பாடல் ஒன்றில் பேக் டான்ஸராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். கௌதம் மேனன் சாரிடம் வாரணம் ஆயிரம் படத்தில் என்னுடைய வீடியோவை காட்டிய போது நீயா அது என ஆச்சரியத்தோடு கேள்வி கேட்டார் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/iamrajesh_pov/status/1699067679397802407?t=-hks6jYZ3U_ax4roqfZuXg&s=19