தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடித்து வரும் இளம் சிட்டுக்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சீரியல் கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார் நடிகை ஒருவர்.
ஜனனியின் தோழியாக வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த வைஷ்ணவி தான் சீரியலில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி இருப்பதால் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vaishnavi Quit From Ethir Neechal