Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படபிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட காயம்.. வைரலாகும் தகவல்

leo-movie-actor-injured-in-shooting

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேநீ நாயகனாக நடித்து வரும் “டபுள் ஸ்மார்ட்” திரைப்படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத் அவர்களின் தலையில் படப்பிடிப்பின் சண்டை காட்சியின் போது வாள் ஒன்று பலமாக பட்டதனால் அவருக்கு மருத்துவமனையில் தையல் போடப்பட்டதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

leo-movie-actor-injured-in-shooting
leo-movie-actor-injured-in-shooting