முடக்கத்தான் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
மூலிகை நிறைந்த சில கீரைகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் முக்கியமான ஒன்று முடக்கத்தான் கீரை. இது கொடி வகையை சேர்ந்த ஒன்று. இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமடைய உதவுகிறது. மேலும் இந்தக் கீரையை வதக்கி அதன் சாற்றை காதில் விட்டால் காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இது மட்டும் இல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் பயன்படுகிறது. குறிப்பாக சிலர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவார்கள் அவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும். மிக முக்கியமாக பெண்களுக்கு பிரசவ நேரத்தில் இந்த இலையை இடித்து அடி வயிற்றில் கட்டுவார்கள் அப்படி கட்டி வந்தால் சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு அதிகம்.
இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து பாதுகாக்க உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் கீரையை ஒரு நோய் தீர்க்கும் மூலிகை என அறிந்து உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

